/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
250 கிராமங்களுக்கான குடிநீர் திட்ட சோதனை ஓட்டம் துவக்கம் ஆக.,12 ல் பயன்பாட்டிற்கு வருகிறது

ADDED : ஆக 07, 2024 07:35 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி தாலுகாவில் 250 கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.162 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் முடிந்து அதற்கான சோதனை ஓட்டம் துவங்கியுள்ளது.
மூல வைகை ஆறு உற்பத்தியாகும் மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்துள்ள கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களுக்கு வைகை ஆற்றில் உறை கிணறுகள் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஆண்டிபட்டி ஒன்றியம், தேனி ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடை சரி செய்ய 250 கிராமங்கள் பயன்பெறும் வகையில் வைகை அணையில் இருந்து புதிய குடிநீர் திட்டம் ரூ.162 கோடி மதிப்பில் 2020ம் ஆண்டு துவக்கி பணிகள் நடந்தது. சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு ராட்சத குழாய்கள் மூலம் ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை, தேனி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு வழங்கப்பட உள்ளது. திட்ட பணிகள் முடிந்து தற்போது சோதனை ஓட்டம் துவங்கியுள்ளது.
குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: இத்திட்டத்தில் தினமும் 10.71 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட உள்ளது. லட்சக்கணக்கானோர் பயன்படும் இந்த புதிய குடிநீர் திட்டம் ஆகஸ்ட் 12 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார் என்றனர். 250 கிராமங்களுக்கு முதல் முறையாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் என்பதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.