/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொழிலாளியை கைது செய்த மேற்கு வங்க போலீசார்
/
தொழிலாளியை கைது செய்த மேற்கு வங்க போலீசார்
ADDED : ஆக 03, 2024 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் லால் சந்து 25. இவருக்கு வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மேற்கு வங்கத்தில் உள்ளது.
அங்கிருந்து தப்பிவந்த இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கேரளா குமுளியில் கட்டட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் குமுளி வந்த மேற்கு வங்க போலீசார் கேரள போலீசாரின் உதவியுடன் இவரை கைது செய்தனர். பீர்மேடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபின் இவர் மேற்குவங்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.