/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இரண்டாவது கணவர் அடித்ததில் பெண் காயம்
/
இரண்டாவது கணவர் அடித்ததில் பெண் காயம்
ADDED : செப் 14, 2024 05:38 AM
பெரியகுளம்: பெரியகுளம் அருகே வடுகபட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி முத்துச்செல்வி 27. இவர்களுக்கு சர்மிளா 4 மகள் உள்ளார். கணவன், மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
முத்துச்செல்வி, டி.கள்ளிப்பட்டி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ரகு 27.வை இரண்டாம் திருமணம் செய்தார். இரு ஆண்டுகள் குடும்பம் நடத்திய நிலையில், ரகு நடவடிக்கை பிடிக்காததால், மகளை கைலாசபட்டியில் பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு, ஓராண்டாக முத்துச்செல்வி கேரளாவிற்கு வேலைக்கு சென்றார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மகளை பார்க்க கைலாசபட்டிக்கு முத்துச்செல்வி வந்தார். இதனையறிந்த ரகு, முத்துசெவ்வியிடம் சமாதானமான இருப்போம் என நேற்று முன்தினம் இரவு பெரியகுளம் தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு முத்துச்செல்வியை இனிமேல் கேரளாவிற்கு போகக்கூடாது என சுவரில் மோத வைத்து, கொலை மிரட்டல் விடுத்தார். பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு முத்துச்செல்வி அனுமதிக்கப்பட்டார். தென்கரை போலீசார் ரகுவை கைது செய்தனர்.