/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போக்குவரத்து தொழிலாளர் சங்க பேரவைக் கூட்டம்
/
போக்குவரத்து தொழிலாளர் சங்க பேரவைக் கூட்டம்
ADDED : ஆக 22, 2024 03:22 AM

தேனி: தேனியில் அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யு.,) ஆண்டு பேரவை கூட்டம் நடந்தது. திண்டுக்கல் மண்டலத் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் பேசியதாவது: இத்துறையின் தொழிலாளர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகளை அரசு வழங்கி,காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு சலுகைகள் அறிவிக்கின்ற போது அதற்கான நிதியை ஒதுக்கி போக்குவரத்து கழகம் பாதுகாக்கப்பட வேண்டும். ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.' என்றார். சங்க துணைத் தலைவர் முருகன், வேலை அறிக்கையை துணைப் பொதுச் செயலாளர் மணிகண்டன், பொதுச் செயலாளர் ராமநாதன் ஆகியோர் சமர்பித்தனர். வரவு செலவு அறிக்கையை பொருளாளர் ஜோசப் அருளானந்து சமர்பித்தார். சி.ஐ.டி.யு., திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பிரபாகரன், தேனி மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் பங்கேற்றனர். அகவிலைப்படி உயர்த்த வேண்டும். மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் தொழிலாளர்களை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.