ADDED : ஏப் 25, 2024 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி சீதாராம்தாஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு பொங்கல் விழா நடந்தது.பொங்கல் விழாவில் சுவாமி சிலையைஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் 50, அவரது மகன் சூர்யா 21 ஆகியோர் கோயில் சார்பில் தங்களுக்கு முதல் மரியாதை கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்போது அர்ஜுனன் கம்பால் சுவாமி சிலையை சேதப்படுத்தி ஊர்வலத்தில்சென்றவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த முருகேசன் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் சுவாமி சிலையை சேதப்படுத்தி தகராறு செய்த இருவரையும் கைது செய்தனர்.

