/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'பூத்' சிலிப் வழங்குவதில் குளறுபடி அதிகாரிகள் கண்காணிப்பு அவசியம்
/
'பூத்' சிலிப் வழங்குவதில் குளறுபடி அதிகாரிகள் கண்காணிப்பு அவசியம்
'பூத்' சிலிப் வழங்குவதில் குளறுபடி அதிகாரிகள் கண்காணிப்பு அவசியம்
'பூத்' சிலிப் வழங்குவதில் குளறுபடி அதிகாரிகள் கண்காணிப்பு அவசியம்
ADDED : ஏப் 12, 2024 06:09 AM
ஆண்டிபட்டி: வாக்காளர்களின் முழு விபரம் அடங்கிய பூத் சிலிப் ஓட்டுச் சாவடி அலுவலர்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் ஓட்டுச்சாவடி வாரியாக பூத் சிலிப்புகளை மொத்தமாக பெற்று அதனை உரிய வாக்காளரிடம் ஒப்படைத்து கையெழுத்து பெற வேண்டும்.
வாக்காளர்கள் தேர்தலில் விரைவாக ஓட்டளிக்க பூத் சிலிப் பெரும் உதவியாக இருக்கும். வீடு வீடாக வாக்காளர்களிடம் பூத் சிலிப்பை வழங்க வேண்டிய அலுவலர்கள் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு வாக்காளர்களை அங்கு வரவழைத்து வழங்குகின்றனர்.
இந்த விவரம் பலருக்கு தெரிவதில்லை. வயதானவர்கள், எழுதப் படிக்கத் தெரியாதவர்கள், வெளியிடங்களுக்கு சென்றவர்கள் பூத் சிலிப் பெற முடியாமல் சிரமப்படுகின்றனர்.
கடந்த காலங்களில் பூத் சிலிப் அரசியல் கட்சியினர் மூலம் வீடு வீடாக வாக்காளர்களிடம் வழங்கப்பட்டது.
தற்போது வாக்காளர் பட்டியல் பூத் சிலிப் ஆகியவற்றில் வாக்காளரின் புகைப்படமும் இல்லை.
ஒரே பூத்தில் ஒரே பெயர் கொண்ட பலர் இருப்பதால் பூத் சிலிப் உரிய நபரிடம் சென்று சேர்வதில்லை.
இது குறித்து அதிகாரிகளும் கண்காணிக்கவில்லை. இதனால் தங்களுக்கான பூத் சிலிப்பை யாரிடம் எங்கு சென்று பெற்றுக் கொள்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.

