/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடலுாரில் ரோடு விரிவாக்க பணி முழுமை பெறுவது எப்போது: அகலப்படுத்தியும் குறையாத போக்குவரத்து நெரிசல்
/
கூடலுாரில் ரோடு விரிவாக்க பணி முழுமை பெறுவது எப்போது: அகலப்படுத்தியும் குறையாத போக்குவரத்து நெரிசல்
கூடலுாரில் ரோடு விரிவாக்க பணி முழுமை பெறுவது எப்போது: அகலப்படுத்தியும் குறையாத போக்குவரத்து நெரிசல்
கூடலுாரில் ரோடு விரிவாக்க பணி முழுமை பெறுவது எப்போது: அகலப்படுத்தியும் குறையாத போக்குவரத்து நெரிசல்
ADDED : ஆக 29, 2024 08:40 AM
கூடலுார்: கூடலுார் மாநில நெடுஞ்சாலையில் ரோடு விரிவாக்க பணி முழுமை பெறாமல் அரைகுறையாக முடிக்கப்பட்டதால் அகலப்படுத்தியும் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமம் அடைகின்றனர்.
கூடலுார் நகராட்சி கேரள எல்லையில் உள்ளது. கேரளாவில் இருந்து தினந்தோறும் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க ஏராளமான கேரள மக்கள் கூடலுாருக்கு வருகின்றனர். இதனால் வாகன போக்குவரத்து அதிகம். வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தெற்கு மந்தை வாய்க்கால் வரை நகர்ப் பகுதியில் உள்ள 4 கி.மீ., தூர ரோடு மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. புறவழிச்சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த போதிலும் நகர் பகுதியில் வாகன போக்குவரத்து எண்ணிக்கை குறையவில்லை.
நகர்ப் பகுதியில் உள்ள 4 கி.மீ., தூர சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி 2022 ஏப்ரலில் துவங்கியது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இடையூறாக இருந்த மின்கம்பங்கள், மரங்கள் அகற்றப்பட்டன. மூன்று இடங்களில் பாலம் அகலப்படுத்தும் பணி நடந்தது. சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.
அரைகுறை
அனைத்துப் பணிகளும் நடந்த போதிலும் முழுமை பெறாமல் அரைகுறையாகவே உள்ளது. சென்டர் மீடியன் பல இடங்களில் உடைக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவே இல்லை. ஆக்கிரமிப்புகளுக்கு ஏற்றார்போல் ரோடும் அமைக்கப்பட்டது. டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள் அகற்றுவதில் முழுமை பெறாமல் உள்ளது. அகற்றப்பட்ட பல மின்கம்பங்கள் சென்டர் மீடியனில் விபத்து ஏற்படும் வகையில் போடப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு
முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை அமைக்கும் பணி நடந்ததால், அகற்றப்பட்ட பல இடங்களில் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தார் சாலையிலேயே வீடு, கடைகளின் படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். டூ வீலர் ஒர்க் ஷாப்பில் வாகனங்கள் முழுவதும் ரோட்டிலேயே நிறுத்தப்படுகின்றன. போக்குவரத்து அறிவிப்பு பலகை பல இடங்களில் வைக்கப்படவில்லை. இதனால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமை பெறாத பணிகளை மீண்டும் துவக்க மாநில நெடுஞ்சாலைத்துறை முன் வர வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.