/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காஞ்சிமரத்துறை பாலத்தின் தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா
/
காஞ்சிமரத்துறை பாலத்தின் தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா
காஞ்சிமரத்துறை பாலத்தின் தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா
காஞ்சிமரத்துறை பாலத்தின் தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா
ADDED : மே 04, 2024 06:24 AM

கூடலுார்: பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ள காஞ்சிமரத்துறை பாலத்தின் தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கூடலுாரில் இருந்து வெட்டுக்காடு, பளியன்குடி, ஊமையன் தொழுவில் உள்ள விவசாய நிலங்களுக்கும், குடியிருப்புகளுக்கும் செல்ல முல்லைப் பெரியாற்றின் குறுக்கே காஞ்சிமரத்துறை பாலம் கட்டப்பட்டது. இப்பாலத்தின் வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. விளைப் பொருட்களை வாகனங்களில் கொண்டு வர இப்பாலம் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்து இடிந்தது.
இதனை சீரமைக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுவரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவே இல்லை. தற்போது ஆற்றில் குறைவாக தண்ணீர் வரும்போது சீரமைப்பது எளிதாகும். மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.