/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இயற்கை எரிவாயு தேய்ப்பு பெட்டி வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை
/
இயற்கை எரிவாயு தேய்ப்பு பெட்டி வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை
இயற்கை எரிவாயு தேய்ப்பு பெட்டி வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை
இயற்கை எரிவாயு தேய்ப்பு பெட்டி வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 04, 2024 01:56 AM
தேனி: தேனி விஸ்வநாத தாஸ் நகர் சலவை தொழிலாளர் சங்கத்தில், தமிழ்நாடு ஜெனரல் எம்ப்ளாய்ஸ் யூனியன் சார்பில் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார். மாவட்டப் பொதுச் செயலாளர் ராஜதுரை, மாவட்டப் பொருளாளர் கமலக்கண்ணன், சாலையோர வியாபாரிகள் சங்க தலைவர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர். தேனி புது பஸ் ஸ்டாண்டு வால்கரடு பகுதியில் அரைகுறையாக கட்டப்படும் தடுப்புச்சுவரை கலெக்டர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சலவைத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மரக்கரி, தேய்ப்புப் பெட்டிக்கு பதிலாக இயற்கை எரிவாயுவில் இயங்கும் தேய்ப்புப் பெட்டி வழங்கிட வேண்டும். புது பஸ் ஸ்டாண்ட் அருகே மக்களுக்கு இடையூறாக உள்ள கோம்பை மன மகிழ் மன்றத்தை மூட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் ரவி, வேலுச்சாமி, சுருளியம்மாள், தங்கதாய் ஆகியோர் பங்கேற்றனர். சலவைத் தொழிலாளர் சங்கத்தின் தேனி நகரத் லைவர் மாடசாமி நன்றி தெரிவித்தார்.