ADDED : ஏப் 18, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் நூறு வயதை கடந்த 139 வாக்காளர்கள் உள்ளனர்.
இடுக்கி லோக்சபா தொகுதி தேவிகுளம், உடும்பன்சோலை, பீர்மேடு, இடுக்கி, தொடுபுழா ஆகிய சட்டசபை தொகுதிகள், எர்ணாகுளம் மாவட்டத்தில் கோதமங்கலம், மூவாற்றுபுழா ஆகிய சட்டசபை தொகுதிகள் என ஏழு சட்டசபை தொகுதிகளைக் கொண்டதாகும்.
இத் தொகுதியில் ஏப்.26ல் தேர்தல் நடக்கிறது. அதற்கு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி இடுக்கி மாவட்டத்தில் நூறு வயதை கடந்த 139 வாக்காளர்கள் உள்ளதாக தெரியவந்தது.
அதில் கூடுதலாக மூதாட்டிகள் 85 பேர். 54 பேர் ஆண்கள். சட்டசபை தொகுதி வாரியாக நூறு வயதை கடந்த வாக்காளர்கள் எண்ணிக்கை:
தேவிகுளம் 33, உடும்பன்சோலை, தொடுபுழா தலா 34, இடுக்கி 16, பீர்மேடு 22 பேர் உள்ளனர்.

