/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் 101.4 மி.மீ., மழை மே 12ல் கனமழைக்கு வாய்ப்பு
/
மாவட்டத்தில் 101.4 மி.மீ., மழை மே 12ல் கனமழைக்கு வாய்ப்பு
மாவட்டத்தில் 101.4 மி.மீ., மழை மே 12ல் கனமழைக்கு வாய்ப்பு
மாவட்டத்தில் 101.4 மி.மீ., மழை மே 12ல் கனமழைக்கு வாய்ப்பு
ADDED : மே 10, 2024 05:23 AM
தேனி: மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மழை 101.4 மி.மீ., மழை பதிவானது. தேனி நகர்பகுதி, வீரபாண்டியில் கனமழை பெய்தது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து அனலாய் கொதித்தது. பகலில் மக்கள் வெளியே வர அஞ்சினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பரவலாக பலத்த காற்று, மின்னலுடன் மழை பொழிந்தது.
இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சாக்கடைகளில் மழைநீர் செல்ல வழியின்றி கழிவு நீருடன் ரோட்டில் ஓடியது.
வீரபாண்டியில் 24 மி.மீ., பெரியகுளத்தில் 21 மி.மீ., சண்முகாநதி அணையில் 19.4 மி.மீ., வைகை அணையில் 12.4 மி.மீ., உத்தமபாளையத்தில் 7.4 மி.மீ., ஆண்டிப்பட்டியில் 6 மி.மீ., தேக்கடியில் 2.6 மி.மீ., கூடலுாரில் 1.6 மி.மீ., என மாவட்டத்தில் மொத்தம் 101.4 மி.மீ., மழை பதிவானது. சராசரியாக 7.8 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் மே 12ல் மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.