/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
10, 11ம் நுாற்றாண்டின் இந்திரன் சிற்பம் கண்டுபிடிப்பு
/
10, 11ம் நுாற்றாண்டின் இந்திரன் சிற்பம் கண்டுபிடிப்பு
10, 11ம் நுாற்றாண்டின் இந்திரன் சிற்பம் கண்டுபிடிப்பு
10, 11ம் நுாற்றாண்டின் இந்திரன் சிற்பம் கண்டுபிடிப்பு
ADDED : செப் 12, 2024 07:27 PM

தேவாரம்:தேனி மாவட்டம், போடி சி.பி.ஏ., கல்லுாரி பேராசிரியர் மாணிக்கராஜ், க.புதுப்பட்டியைச் சேர்ந்த ஜெகதீஷ்குமார், முபிம் தகவலின்படி உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லுாரி முன்னாள் பேராசிரியர் வர்கீஸ் ஜெயராஜ், ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சிவப்பிரகாசம் ஆகியோருடன் இணைந்து தேவாரம் அருகே க.புதுப்பட்டியில் கள ஆய்வு நடந்தது.
இதில் 5 அடி உயரம், ஒரு அடி அகலம் உள்ள 10, 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்த இந்திரன் சிற்பம் கண்டறியப்பட்டது.
பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியதாவது:
க.புதுப்பட்டி கிழக்கே உள்ள நீலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. அதனருகே உள்ள மரத்தின் அடியில் 5 அடி உயரம் ஒரு அடி அகலம் உடைய இந்திரனின் சிற்பம் உள்ளது.
இந்திரன், தன் வாகனமான வெள்ளை யானையின் மீது ராஜலீலாசனம் எனும் அமர்வில் உள்ள காட்சி புடைப்பு சிற்பமாக வெட்டப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.