/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டேங்கருடன் கூடிய டிராக்டர் ஓட்டும் 12வயது சிறுவன் அச்சத்தில் பொதுமக்கள்

ADDED : மார் 28, 2024 01:44 AM

ஆண்டிபட்டி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் தண்ணீர் டேங்கருடன் இணைந்த டிராக்டரை 12 வயது சிறுவன் ஓட்டிச் செல்வது அப்பகுதியில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
ஆண்டிபட்டி பகுதியில் ஓட்டுநர் உரிமம் இன்றி இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை பலரும் ஓட்டிச்செல்கின்றனர். அன்றாடம் பல இடங்களில் போலீசார் கண்காணித்து ஓட்டுநர் உரிமம், உரிய ஆவணம் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதில்லை.
ஆனால் 18 வயது பூர்த்தி ஆகாத பலரும் இருசக்கர வாகனங்களை அதிகம் ஓட்டுகின்றனர். இதனால் விபத்து ஏற்படுகிறது. ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் தண்ணீர் டேங்கருடன் இணைந்த டிராக்டரை 12 வயது சிறுவன் மெயின் ரோட்டிலும் ஊருக்குள்ளும் தொடர்ந்து ஓட்டிச் செல்கிறார். இதனை யாரும் கண்டிக்காததால், சிறுவனின் செயலை ஊக்கப்படுத்துவதாக உள்ளது. டிராக்டரை ஓட்டி வரும் சிறுவனின் செயல் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. போலீசார், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.