/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாற்றுத்திறனாளிகள், முதியோர் 1234 பேருக்கு தபால் ஓட்டு அனுமதி
/
மாற்றுத்திறனாளிகள், முதியோர் 1234 பேருக்கு தபால் ஓட்டு அனுமதி
மாற்றுத்திறனாளிகள், முதியோர் 1234 பேருக்கு தபால் ஓட்டு அனுமதி
மாற்றுத்திறனாளிகள், முதியோர் 1234 பேருக்கு தபால் ஓட்டு அனுமதி
ADDED : ஏப் 01, 2024 11:56 PM
தேனி : தொகுதியில் மாற்றத்திறனாளிகள், முதியோர் என 1234 பேருக்கு தபால் ஓட்டளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களில் உடல் ஊனம் 40 சதவீதத்திற்கு மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள், 85 வயதிற்கு மேற்பட்டமுதியோர் சிரமம் இன்றி ஓட்டளிக்க தபால் ஓட்டு வழங்கப்பட்டுள்ளது.
தபால் ஓட்டளிக்க முதியோர் 14,219 பேர், மாற்றுத்திறனாளிகள் 11,096 பேர் என 25,315 பேர் கண்டறியப்பட்டனர்.
அவர்களில் 21,875 பேருக்கு '12டி' எனும் தபால் ஓட்டளிப்பிற்கான படிவங்கள் வழங்கப்பட்டன. படிவங்களை பூர்த்தி செய்து மார்ச் 25க்குள் வழங்க அறிவுறுத்தப்பட்டது. படிவம் பூர்த்தி செய்து 1239 பேர் வழங்கினர்.
இதில் 5 படிவங்கள் நிராகரிக்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் 616பேர், வயதானவர்கள் 618 பேர் என 1234 பேருக்கு தபால் ஓட்டளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.