/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தோட்டத் தொழிலாளர்கள் ரூ.1.61 கோடி நிவாரண நிதி
/
தோட்டத் தொழிலாளர்கள் ரூ.1.61 கோடி நிவாரண நிதி
ADDED : ஆக 22, 2024 03:21 AM

மூணாறு: மூணாறில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகத்தினர் இணைந்து முதல்வர் நிவாரணநிதிக்கு ரூ.1.61 கோடி வழங்கினர்.
கேரளா, வயநாட்டில் ஜூலை 30ல் ஏற்பட்ட நிலச்சரிவில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நூற்றுக் கணக்கானோர் வீடு உள்பட உடமைகளை இழந்தனர். நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் முதல்வர் நிவாரண நிதிக்கு ஏராளமானோர் நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் மூணாறு பகுதியில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முன்வந்தனர்.
அதன்படி கே.டி.எச்.பி. கம்பெனியைச் சேர்ந்த தொழிலாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் சார்பில் ரூ. 57,74,000, தலையார் எஸ்டேட் தொழிலாளர்கள் சார்பில் ரூ.3,90,004, கே.டி.எச்.பி., டாடா ஆகிய கம்பெனிகள் நிர்வாகம் சார்பில் தலா ரூ.50 லட்சம் என ரூ. 1,61,64,004 ஐ முதல்வர் பினராயிவிஜயனிடம் வழங்கப்பட்டது.
தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா, ஐ.என்.டி.யு.சி.யைச் சேர்ந்த மணி, முனியாண்டி, ஏ.ஐ.டி.யு.சி. யைச் சேர்ந்த அவுசேப், பழனிவேல், சி.ஐ.டி.யு.வைச் சேர்ந்த சசி, லெட்சுமணன், கே.டி.எச்.பி. கம்பெனி நிர்வாக இயக்குனர் மாத்யூ ஆப்ரகாம் உள்பட பலர் முதல்வரை நேரில் சந்தித்து நிவாரண தொகையை வழங்கினர்.