/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோடை மழைக்கு 16.89 எக்டேர் வாழை, பப்பாளி, முருங்கை சேதம் 7 வீடுகள் பகுதி இடிந்தது

ADDED : மே 12, 2024 03:59 AM

தேனி: மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையில் கடந்த நான்கு நாட்களில் வாழை, பப்பாளி, முருங்கை மரங்கள் 16.89 எக்டேர் பாதிப்படைந்துள்ளது. தகர வீடுகள் 7 பகுதி சேதமடைந்துள்ளது.
மாவட்டத்தில் மார்ச் இறுதியில் வாரத்தில் இருந்து கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பகலில் பொதுமக்கள் வெளியில் நடமாட இயலாத நிலை நீடித்தது. ஆனால் மே துவக்கத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை, பலத்த காற்று வீச துவங்கியது.
இந்நிலையில் மே 8 முதல் மாவட்டம் முழுவதும் பரவாலாக கோடை மழை கொட்டி வருகிறது. கடந்த 4 நாளில் மாவட்டத்தில் 535.86 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
கோடை மழைக்கு ஆண்டிப்பட்டி, கம்பம், பெரியகுளம், உத்தமபாளையத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை 15.35 எக்டேர், முருங்கை 0.57 எக்டேர், பப்பாளி 0.97 எக்டேர் சேதமடைந்தது. ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தே.மீனாட்சிபுரத்தில் 3 வீடுகள், 7 மாட்டுக்கொட்டம், புதுராமசந்திராபுரத்தில் 2வீடுகள், குள்ளப்பபுரம், எ.புதுக்கோட்டையில் தலா ஒரு வீடுகள் என 7 வீடுகள் பகுதியும், 7 மாட்டுக்கொட்டம் மழையில் சேதமடைந்தன.
மேலும் மழைச்சேதங்கள் பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.