/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
17 ஆயிரம் ச.மீ., பசுமை குடில் அமைக்க இலக்கு
/
17 ஆயிரம் ச.மீ., பசுமை குடில் அமைக்க இலக்கு
ADDED : ஆக 16, 2024 04:42 AM
தேனி: தேனி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பிரபா கூறியதாவது: பசுமை குடில் மூலம் வெள்ளரி, குடைமிளகாய், கொடிவகை தக்காளி, ரோஜா உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. பசுமை குடில் மூலம் சாகுபடி செய்வதால் அனைத்து சீசனிலும் பயிர் சாகுபடி செய்யலாம். பூச்சி தாக்குதல், நோய்தாக்குதல் மிக குறைவாக இருக்கும்.
இதனால் பசுமை குடில் மூலம் உற்பத்தியாகும் காய்கறிகள், பழங்களில் பூச்சி கொல்லி உள்ளிட்வை குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் ச.மீட்டருக்கும் மேல் பசுமை குடில் அமைத்து விவசாயிகள் பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தாண்டு தோட்டக்கலைத்துறை சார்பில் மாவட்டத்தில் 17ஆயிரம் ச.மீ., பரப்பில் மானியத்தில் பசுமை குடில் அமைக்கப்பட உள்ளது. விவசாயிகள் குறைந்தது 500 ச.மீ., முதல் 4ஆயிரம் ச.மீ., வரை பசுமை குடில் அமைக்க விண்ணப்பிக்கலாம்.
மானியமாக ச.மீட்டருக்கு குறைந்த பட்சம் ரூ.422, அதிகபட்சம் ரூ467.5 வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் அருகில் உள்ள தோடக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம். என்றனர்.

