/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் நகராட்சி கூட்டம் 18 கவுன்சிலர்கள் 'ஆப்சென்ட்'
/
கம்பம் நகராட்சி கூட்டம் 18 கவுன்சிலர்கள் 'ஆப்சென்ட்'
கம்பம் நகராட்சி கூட்டம் 18 கவுன்சிலர்கள் 'ஆப்சென்ட்'
கம்பம் நகராட்சி கூட்டம் 18 கவுன்சிலர்கள் 'ஆப்சென்ட்'
ADDED : ஜூன் 23, 2024 04:38 AM
கம்பம்: லோக்சபா தேர்தல் நடத்தை விதிகளை சுட்டிக்காட்டி மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் மன்ற கூட்டங்கள் நடத்த தடை இருந்தது.
கடந்த 10 நாட்களுக்கு முன் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டதை தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் மன்ற கூட்டங்கள் நடைபெற துவங்கியுள்ளது.
கம்பம் நகராட்சியில் 3 மாதங்களுக்கு பின் நேற்று முன்தினம் மாலை நகராட்சி கூட்டம் தலைவர் வனிதா (தி.மு.க.) தலைமையில் நடந்தது.
நகராட்சியில் உள்ள 33 கவுன்சிலர்களில் கூட்டத்திற்கு 18 கவுன்சிலர்கள் வராமல் ஆப்சென்ட் ஆகினர். தலைவர் மற்றும் 14 கவுன்சிலர்கள் வந்திருந்தனர். நகராட்சி கமிஷனர் வாசுதேவன், பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.