/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மானியத்தில் 18,400 பேருக்கு பழ, மரக்கன்றுகள் வழங்க ஏற்பாடு
/
மானியத்தில் 18,400 பேருக்கு பழ, மரக்கன்றுகள் வழங்க ஏற்பாடு
மானியத்தில் 18,400 பேருக்கு பழ, மரக்கன்றுகள் வழங்க ஏற்பாடு
மானியத்தில் 18,400 பேருக்கு பழ, மரக்கன்றுகள் வழங்க ஏற்பாடு
ADDED : ஜூலை 01, 2024 05:32 AM
தேனி, : மாவட்டத்தில் 75 சதவீத மானியத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் 18,400 பேருக்கு பழ, மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.
பொது மக்கள் வீட்டில் காய்கறிகள், பழங்கள் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் பப்பாளி, வாழை, கருவேப்பிலை, முருங்கை மர கன்றுகள் வழங்கப்பட உள்ளது. இந்த 4 பழ, மரகன்றுகள் தொகுப்பின் விலை ரூ. 60 ஆகும். இதனை 75 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
பொது மக்கள் ரூ.15 மட்டும் செலுத்தி தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு தொகுப்பு மட்டும் வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ள 8 வட்டாரத்திற்கும் தலா 2300 தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன.
வீட்டில் மரகன்றுகள் வளர்க்க விரும்பும் பொது மக்கள் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் பிரபா தெரிவித்துள்ளார்.