/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
196 போலீசார் 2 நாட்களுக்கு இட மாற்றம்
/
196 போலீசார் 2 நாட்களுக்கு இட மாற்றம்
ADDED : ஏப் 18, 2024 05:55 AM
பெரியகுளம்: பெரியகுளம் சப்- டிவிஷன் உட்பட்ட 4 போலீஸ் ஸ்டேஷனில் 196 போலீசார்கள் தேர்தலை முன்னிட்டு இரு தினங்களுக்கு வேறு பகுதிக்கு இடமாற்றத்தில் சென்றனர்.
தேனி லோக்சபா தேர்தல் நாளை ஏப்.19ல் நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு சொந்த தொகுதியில் போலீசார் வேலை செய்யக்கூடாது என தேர்தல் கமிஷன் உத்தரவில், ஒரு மாதத்திற்கு முன்பு பெரியகுளம் டி.எஸ்.பி., நல்லு
திருவண்ணாமலைக்கும், மதுரையிலிருந்து சூரக்குமாரன் பெரியகுளம் டி.எஸ்.பி., யாக பணி மாற்றம் செய்யப்பட்டனர்.
இன்ஸ்பெக்டர்களும் இதே நிலையில் பணி மாற்றத்தில் சென்றுள்ளனர். இவர்களை தொடர்ந்து பெரியகுளம் சப்- டிவிஷன் வடகரை, தென்கரை, ஜெயமங்கலம், தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றும் 194 போலீசார்கள் தேனி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிபட்டி, போடி, கம்பம் சட்டசபை தொகுகளுக்கு இன்றும், நாளையும் (ஏப்.18, ஏப்.19) இரு நாட்களுக்கு தேனி மாவட்ட நிர்வாகம் பணி மாற்றம் செய்தது. அந்த சட்டசபை தொகுதியில் இருந்து போலீசார்கள் பெரியகுளம் சப்- டிவிஷனுக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வார்கள்.

