/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டு எண்ணிக்கை மையத்தை சுற்றி 2 கி.மீ., துாரத்திற்கு 'ட்ரோன்' பறக்க தடை

ADDED : ஏப் 29, 2024 05:58 AM
தேனி: லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்.,19ல் முடிந்தது.
தேனி லோக்சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் கல்வி குழும வளாகத்தில் உள்ள கட்டடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள், வளாகம் முழுவதும் 300 கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. மேலும் துணை ராணுவப்படையினர், சிறப்பு போலீசார், உள்ளூர் போலீசார் என 250 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வேட்பாளர்கள், முகவர்கள் மையத்தை பார்வையிட்டு கண்காணிப்பு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மையத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ல் நடக்கிறது. இந்நிலையில் ஓட்டுபதிவு இயந்திரங்கள் வைத்துள்ள கல்வி வளாகத்தை சுற்றி 2 கி.மீ.,க்கு ட்ரோன் ஆளில்லா விமானங்கள் பறக்க தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். மீறுபவர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.