/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
2 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலம்; மேம்படுத்த ரூ.24 லட்சம் ஒதுக்கீடு
/
2 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலம்; மேம்படுத்த ரூ.24 லட்சம் ஒதுக்கீடு
2 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலம்; மேம்படுத்த ரூ.24 லட்சம் ஒதுக்கீடு
2 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலம்; மேம்படுத்த ரூ.24 லட்சம் ஒதுக்கீடு
ADDED : ஜூலை 03, 2024 05:35 AM
தேனி : மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலத்தை மேம்படுத்த ரூ.24 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மானாவாரி நிலங்களை பயிர் உற்பத்தி நிலங்களாக மாற்ற வேளாண் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக மானாவரி நிலத்தில் உழவு பணி மேற்கொள்ள ஏக்கருக்கு ரூ. 500, விதைப்பு பணிக்கு ரூ. 700 என ரூ.1200 வழங்கப்பட உள்ளது.
ஒரு விவசாயி அதிகபட்சம் ஒரு ஏக்கருக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக மாவட்டத்திற்கு ரூ.24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக ஆண்டிப்பட்டி 540 ஏக்கர், கடமலைக்குண்டு 340, பெரியகுளம் 140, தேனி 130, கம்பம் 190, உத்தமபாளையம் 270, சின்னமனுார் 200, போடி 190 என மொத்தம் 2ஆயிரம் ஏக்கர் தேர்வு செய்யப்பட உள்ளது.இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம், வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம் என மாநில திட்ட வேளாண் துணை இயக்குனர் சின்னக்கண்ணு தெரிவித்துள்ளனர்.