/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
22 பேரிடம் ரூ.2.27 கோடி சுருட்டல் பெண் டாக்டர் உட்பட மூவர் மீது வழக்கு பெண் டாக்டர் உட்பட மூவர் மீது வழக்கு
/
22 பேரிடம் ரூ.2.27 கோடி சுருட்டல் பெண் டாக்டர் உட்பட மூவர் மீது வழக்கு பெண் டாக்டர் உட்பட மூவர் மீது வழக்கு
22 பேரிடம் ரூ.2.27 கோடி சுருட்டல் பெண் டாக்டர் உட்பட மூவர் மீது வழக்கு பெண் டாக்டர் உட்பட மூவர் மீது வழக்கு
22 பேரிடம் ரூ.2.27 கோடி சுருட்டல் பெண் டாக்டர் உட்பட மூவர் மீது வழக்கு பெண் டாக்டர் உட்பட மூவர் மீது வழக்கு
ADDED : ஏப் 28, 2024 02:32 AM
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் மளிகை கடை உரிமையாளர் சையது சுல்தான் உள்ளிட்ட 22 பேரிடம் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி 2.27 கோடி ரூபாய் மோசடி செய்த மதுரை சதாசிவம்நகர் ஹக்கிம், மகன் அகமது சபீர், அவரது மனைவி டாக்டர் சபீயாபேகம் ஆகியோர் மீது குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
பெரியகுளம் கீழவடகரை அழகர்சாமிபுரம் சேக்முகமது. இவரது அண்ணன் ஹக்கீம். இவர் ஹைதராபாதில் 'மினிமம் இன்வெஸ்மென்ட் பார் கோல்டன் கஸ்டமர்ஸ்' என்ற பங்கு வர்த்தக நிறுவனம் நடத்தினார். இதில் ஹக்கிம் மகன் அகமது சபீர், மருமகள் டாக்டர் சபீயாபேகம் இயக்குனர்களாக இருந்தனர்.
விளம்பரம்
இந்நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய்  முதல் 25 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தால் மாதம் லாபமாக 33,000 ரூபாய் முதல் 1.29 லட்சம் ரூபாய் வரை தருவதாக சேக்முகமது அலைபேசியில் அகமது சபீர் விளம்பரம் செய்தார். அதை நம்பி சேக்முகமது 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார்.
இந்நிலையில் ஹக்கிம் குடும்பத்துடன் மதுரை இளமனுார் சத்யா நகருக்கு குடிபெயர்ந்து, 'சுசி இன்வெஸ்மென்ட்ஸ்' என்ற வர்த்தக நிறுவனத்தை துவக்கினார்.
அதில் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால், 45 நாட்களுக்கு தினமும் வட்டியாக 900 ரூபாய் வழங்குவதாகவும், பின் அசல் தொகையை கொடுப்பதாகவும் சேக்முகமதுவிடம் ஹக்கீம் தெரிவித்தார்.
அதையும் நம்பிய சேக் முகமது உறவினர்கள் 20 பேர் கொடுத்த 1.67 கோடி ரூபாயை வங்கி கணக்கு மற்றும் ரொக்கமாக ஹக்கிம் குடும்பத்தினரிடம் கொடுத்தார்.
சேக்முகமது வாயிலாக பெரியகுளம் தென்கரை மளிகை கடைகாரர் சையது சுல்தான், ஹக்கிம் நிறுவனத்தில் முதலில் 25 லட்சம் ரூபாய், மதுரையில் துவங்கிய நிறுவனத்தில் 35 லட்சம் ரூபாய் என 60 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். சையது சுல்தான், சேக்முகமது, இவரது உறவினர்கள் என பலர் இணைந்து ஹக்கிம் நிறுவனத்தில் 2.27 கோடி ரூபாய் முதலீடு செய்தனர்.
புகார்
ஆனால் கணிசமான தொகையை மட்டும் அனுப்பி விட்டு ஹக்கிம் குடும்பத்தினர் ஏமாற்றி மோசடி செய்தனர்.
இதுகுறித்து சையது சுல்தான், சேக்முகமது ஆகியோர் தென்மண்டல ஐ.ஜி., கண்ண னிடம் புகார் அளித்தனர். அவரது உத்தரவின்படி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி விசாரித்து ஹக்கீம், அமது சபீர், டாக்டர் சபியாபேகம் மீது மோசடி வழக்கு பதிவு செய்தார்.

