/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வேளாண் வளர்ச்சி திட்டத்தில் மாவட்டத்தில் 24 கிராமங்கள் தேர்வு
/
வேளாண் வளர்ச்சி திட்டத்தில் மாவட்டத்தில் 24 கிராமங்கள் தேர்வு
வேளாண் வளர்ச்சி திட்டத்தில் மாவட்டத்தில் 24 கிராமங்கள் தேர்வு
வேளாண் வளர்ச்சி திட்டத்தில் மாவட்டத்தில் 24 கிராமங்கள் தேர்வு
ADDED : ஏப் 25, 2024 04:01 AM
தேனி, : மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பயன்பெற 24 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் மாவட்டம் வாரியாக வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் கிராமங்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு பெறும் கிராமங்களில் வேளாண், தோட்டக்கலை, வருவாய்த்துறை, கால்நடைத்துறை உள்ளிட்ட 13 துறைகள் இணைந்து வளர்ச்சிப்பணிகளை கிராமத்தில் மேற்கொள்கின்றன.
தேனி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 8 வட்டாரத்தில் 83 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த நிதியாண்டில் 8 வட்டாரத்தில் 24 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
வட்டாரம் வாரியாக ஆண்டிப்பட்டியில் மரிகுண்டு, பிச்சாம்பட்டி, ராஜாகல்பட்டி, தேக்கம்பட்டி, கன்னிசேர்வைபட்டி, பாலகோம்பை, போடியில் அம்மாபட்டி, கோடாங்கிபட்டி, காமராஜர்புரம், சின்னமனுாரில் ஏரானம்பட்டி, சீபாலக்கோட்டை, சங்கராபுரம், கம்பத்தில் நாராயணத்தேவன்பட்டி, கடமலைமயிலாடும்பாறையில் முத்தாலம்பாறை, வருஷநாடு, மந்திசுனைமூலக்கடை, பெரியகுளத்தில் ஜல்லிபட்டி, அழகர் நாயக்கன்பட்டி, ஜெயமங்கலம், தேனியில் ஜங்கால்பட்டி, சீலையம்பட்டி, கோட்டூர், உத்தமபாளையத்தில் டி.சிந்தலைச்சேரி, ராயப்பன்பட்டி ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

