/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
25 கிலோ புகையிலை பறிமுதல்: 3 பேர் கைது
/
25 கிலோ புகையிலை பறிமுதல்: 3 பேர் கைது
ADDED : மார் 09, 2025 03:49 AM
ஆண்டிபட்டி : க.விலக்கு பகுதியில் புகையிலை புழக்கம் அதிகம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து எஸ்.ஐ.முஜிபுர் ரஹ்மான் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
தேனி - மதுரை ரோட்டில் திருமலாபுரம் விலக்கு அருகே சந்தேகப்படும்படி சென்ற டூவீலரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அதில் ரூ.21,854 மதிப்பிலான 25 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்துள்ளது. புகையிலை பாக்கெட்டுகள் கொண்டு சென்றவர் மதுரை மாவட்டம் எழுமலையை சேர்ந்த வாசிமலை 31, என்பது தெரியவந்தது. இருசக்கர வாகனம் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தபோலீசார், வாசிமலையை கைது செய்தனர்.
அவரது தகவலில் தேனி பாரஸ்ட் ரோட்டை சேர்ந்த காமராஜ் 49, சிவலிங்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அசோக்குமார் 30, ஆகியோரையும் கைது செய்தனர் கடமலைக்குண்டு அருகே ராஜேந்திரா நகரைச்சேர்ந்த சிவகுமார் என்பவரை தேடி வருகின்றனர்.