/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமியிடம் அத்துமீறிய காமுகனுக்கு 25 ஆண்டுகள் சிறை
/
சிறுமியிடம் அத்துமீறிய காமுகனுக்கு 25 ஆண்டுகள் சிறை
சிறுமியிடம் அத்துமீறிய காமுகனுக்கு 25 ஆண்டுகள் சிறை
சிறுமியிடம் அத்துமீறிய காமுகனுக்கு 25 ஆண்டுகள் சிறை
ADDED : பிப் 28, 2025 01:29 AM
தேனி:உத்தமபாளையம் அருகே வீட்டிற்கு வந்த 6 வயது சிறுமியிடம் அத்துமீறியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தேனி சிறப்பு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உத்தமபாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தென்னை மரம் ஏறும் தொழிலாளி சுருளிவேல் 44. இவரது வீட்டிற்கு 6 வயது சிறுமி விளையாட சென்றார். அப்போது சுருளிவேல் சிறுமியிடம் அத்துமீறினார். பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் 1098 என்ற எண்ணில் தகவல் தெரிவித்தனர். விசாரித்த குழந்தைகள் பாதுகாப்பு நல குழு அமைப்பினர் மூலம் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் சுருளிவேலை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. சுருளிவேலுக்கு 25 ஆண்டுகள் சிறை, ரூ.40ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.