/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு துணைத்தேர்வுகள் 15 பள்ளிகளில் நடக்கிறது 2635 மாணவர்கள் எழுதுகின்றனர்
/
அரசு துணைத்தேர்வுகள் 15 பள்ளிகளில் நடக்கிறது 2635 மாணவர்கள் எழுதுகின்றனர்
அரசு துணைத்தேர்வுகள் 15 பள்ளிகளில் நடக்கிறது 2635 மாணவர்கள் எழுதுகின்றனர்
அரசு துணைத்தேர்வுகள் 15 பள்ளிகளில் நடக்கிறது 2635 மாணவர்கள் எழுதுகின்றனர்
ADDED : ஜூன் 19, 2024 05:01 AM
தேனி, : மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு தவறிய மாணவர்களுக்கான துணைத்தேர்வு 15 மையங்களில் நடக்கிறது. தேர்வுகளை 2635 பேர் எழுதுகின்றனர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரலில் நடந்தது. பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடக்கிறது. பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 2 முதல் ஜூலை 8 வரை நடக்கிறது. பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆண்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்ப்ளி, பிரசன்டேஷன் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி, கம்பம் ஏ.ஆர்., பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, ராயப்பன்பட்டி செயின்ட் அலோசியஸ் மேல்நிலைப்பள்ளிகளில் தேர்வு நடக்கிறது. தேர்வினை 5 பாடப்பிரிவுகளில் 1474 பேர் வரை எழுத உள்ளனர்.
பிளஸ் 1 தேர்வுகள் ஜூலை 2 முதல் ஜூலை 9 வரை நடக்கிறது.
ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, போடி இசட்.கே.எம்.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி கம்மவார் சங்கம்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, கோம்பை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளிகளில் தேர்வு நடக்கிறது. தேர்வினை 735 மாணவர்கள் வரை எழுத உள்ளனர்.
பிளஸ் 2 தேர்வுகள் ஜூன் 24 முதல் ஜூன் 1 வரை நடக்கிறது. தேர்வுகள் பெரியகுளம் வி.எம்., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, கம்பம் ஏல உற்பத்தியாளர்கள் சங்க மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. தேர்வினை 426 மாணவர்கள் வரை எழுதுகின்றனர்.