ADDED : ஜூலை 03, 2026 11:31 PM
அ நிறம் | அளவு
தேனி, ஜூலை 4–மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளிட்ட 18 நீதிமன்றங்களில் அரசு சட்ட ஆலோசகர்களாக பணிபுரிய ஜூன் 4 முதல் ஜூன் 30 வரை கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
வழக்கறிஞர்கள் சுமார் 280க்கும் மேற்பட்டோர் 18 பணியிடத்திற்கு விண்ணப்பித்தனர். இவர்களின் குற்ற விபரங்கள் சரிபார்த்து அரசுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
