ADDED : ஏப் 20, 2024 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேர்தல் தொடர்பான சந்தேகங்கள், புகார்கள் தெரிவிக்க தேர்தல் ஆணையம் இலவச தொலைபேசி எண் 1950, சிவிஜில் செயலி பயன்படுத்த வாக்காளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இவற்றின் மூலம் வரும் புகார்களுக்கு பதிலளிக்க கலெக்டர் அலுவலகத்தில் தனி கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டிருந்தது. ஓட்டுப்பதிவு நாளான நேற்று சிவிஜில் செயலி மூலம் 3புகார்கள், 1950க்கு 285 அழைப்புகள் வந்தன. அழைப்புகளில் 245 அழைப்புகள் ஓட்டுச்சாவடி முகவரி கேட்டும், 30 அழைப்புகள் முதியோருக்கு வாகன வசதி கோரியும், 10 அழைப்புகள் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என புகார் அளித்திருந்தனர்.

