/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முகமூடி அணிந்து தாக்கிய 3 பேர் கைது
/
முகமூடி அணிந்து தாக்கிய 3 பேர் கைது
ADDED : மே 12, 2024 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் ஆசாரிமார் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி 34. கன்னிகாளிபுரம் வாட்டர் டேங்க் அருகே மே 2ல் முகமூடி அணிந்த 3 பேர் இவரை கட்டையால் தாக்கி தப்பி ஓடிவிட்டனர்.
பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணி தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கூடலுார் தெற்கு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மேலபூலானந்தபுரத்தைச் சேர்ந்த கருப்பையா 41, பள்ளபட்டியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் 29, சேர்வராயன்பட்டியைச் சேர்ந்த டோனிகுமார் 19, ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.