/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சாலைப்பணியாளரை மிரட்டி பணம் பறித்த 3 பேர் கைது
/
சாலைப்பணியாளரை மிரட்டி பணம் பறித்த 3 பேர் கைது
ADDED : மே 29, 2024 04:34 AM

பெரியகுளம் : பெரியகுளம் அருகே சாலை பணியாளர் திருமலைச்சாமி 57யை மிரட்டி பணம் பறித்த மூன்று வழிப்பறிக் கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
நிலக்கோட்டை அருகே குளிப்பட்டியைச் சேர்ந்தவர் திருமலைச்சாமி சாலை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது அக்கா மகன் பிரபுவுடன் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனது தங்கை மகள் குழந்தையை பார்க்க மே 26 நள்ளிரவு 12:15 மணிக்கு டூவீலரை ஓட்டிச் சென்றார்.
இவருக்கு முன்பாக தங்கை விஜயலட்சுமி டூவீலரை ஓட்டிச் சென்றார். கதிரப்பன்பட்டி பகுதியில் செல்லும் போது டூவீலரில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் முதலில் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறிக்க முயன்றனர். விஜயலட்சுமி கூச்சலிட்டதால் பின்னால் வந்த திருமலைச்சாமியும் சத்தமிட்டதும் வழிப்பறிக் கொள்ளையர்கள் விஜயலட்சுமியை விட்டு விட்டு பின்னால் டூவீலரில் வந்த திருமலைச்சாமியை வழிமறித்து ரூ.5 ஆயிரம், அலைபேசியை மூவரும் பறித்து கொண்டு தப்பினர்.
சவால்: இந்த சம்பவம் பெரியகுளம் சப்- டிவிஷன் போலீசாருக்கு சவால் விடும் வகையில் அமைந்தது. மூன்று மர்மநபர்களை பிடிப்பதற்கு டி.எஸ்.பி., சூரக்குமாரன், இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன், எஸ்.ஐ., வேல் மணிகண்டன் மற்றும் தனிப்படை போலீசார் 5 பேர் கூட்டம் நடத்தினர்.
கதிரப்பன்பட்டியில் சி.சி.டி.வி., கேமரா பதிவில் மர்மநபர்கள் சென்ற டூவீலர் நம்பர், அவர்களின் உடல்மொழி குறித்து திருமைச்சாமியிடம் கேட்டறிந்தனர். சம்பவத்தில் தேனி-அல்லிநகரம் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்த யோகேஸ்வரன் 22. இவரது நண்பர்கள் பழனிச்சாமி 21. சடேஸ்வரன் 24. ஆகியோர் ஈடுபட்டது உறுதியானது. இவர்களை கைது செய்தனர்.
விசாரணையில் இவர்கள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. -