/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
27 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது: டூவிலர் பறிமுதல்
/
27 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது: டூவிலர் பறிமுதல்
ADDED : ஆக 26, 2024 06:55 AM
கம்பம்:
கம்பத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் நேற்று 27 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது.
கம்பத்தில் கஞ்சா விற்பனையை முழுவதும் ஒழிக்க போலீசார் நடவடிக்கையை துவக்கி உள்ளனர். உத்தமபாளையம் டி.எஸ்.பி. செங்கோட்டுவேல் உத்தரவில் இன்ஸ்பெக்டர் வனிதாமணி மற்றும் குழுவினர் கம்ப மெட்டு ரோட்டில் வாகன சோதனை செய்தனர். ஸ்கூட்டரில் வந்த 3 நபர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். பையில் ரூ. 2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 27 கிலோ கஞ்சா இருந்தது. அதனை கைப்பற்றினர். கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்த படித்துரை 43, கோம்பை ரோட்டை சேர்ந்த பரமன் 34, வள்ளுவர் தெருவை சேர்ந்த கண்ணன் 41 என்பது தெரிய வந்தது. மூவரும் கைது செய்யப்பட்டனர்.
டூவீலரும் கைப்பற்றப்பட்டது. ஆந்திராவில் உள்ள ராஜசேகர் ரெட்டியிடம் கஞ்சாவை வாங்கி வந்து கம்பத்தில் விற்பனை செய்ய திட்டமிட்டதாகவும் கூறினார்கள். ஆந்திராவில் கஞ்சாவை விற்ற வரை கைது செய்ய தனிப்படை ஆந்திரா சென்றுள்ளது.

