/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் குரூப் 4 தேர்வில் 31,948 பேர் பங்கேற்பு 8921 பேர் 'ஆப்சென்ட்'

ADDED : ஜூன் 10, 2024 05:53 AM

தேனி மாவட்டத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வினை 31,948 பேர் எழுதினர். தேர்வு எழுதாமல் 8921 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 தேர்வு ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. தேர்வு நேற்று நடந்தது.
மாவட்டத்தில் இத்தேர்வானது தாலுகா வாரியாக தேனி 46, ஆண்டிப்பட்டி 21, போடி 18, பெரியகுளம் 24, உத்தமபாளையத்தில் 45 என, மொத்தம் 154 மையங்களில் நடந்தது.
தேர்வில் பங்கேற்க 40,869 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
தேனியில் 9607, ஆண்டிப்பட்டி 4083, போடி 4168, பெரியகுளம் 5166, உத்தமபாளையத்தில் 8924 பேர் என 31,948 பேர் தேர்வு எழுதினர். மீதமுள்ள 8921 பேர் தேர்வில் பங்கேற்காமல் 'ஆப்சென்ட்' ஆகினர். தேனி மேரி மாத மெட்ரிக் மேல்நிலைப் பள்ளயில் நடந்த தேர்வினை கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார்.
தாமதத்தால் திருப்பி சென்றவர்கள்
தேனி - பெரியகுளம் ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தேர்வு நடந்தது. தேர்விற்கு காலை 9:00 மணிக்கு முன்னதாக வர வேண்டும் என, தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
ஆனால், தேனி நகர் பகுதி, வருஷநாடு பகுதிகளில் இருந்து வருவதாக கூறி 10 பேர் 9:15 மணிக்கு மேல் வந்தனர். காலதாமதமாக வந்த அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திருப்பி சென்றனர்.