/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பட்ஜெட் நகல் எரிக்க முயன்ற 35 பேர் கைது
/
பட்ஜெட் நகல் எரிக்க முயன்ற 35 பேர் கைது
ADDED : ஆக 02, 2024 06:59 AM

தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, மத்திய அரசை கண்டித்து பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், பட்ஜெட் நகல் எரிக்க முயற்சித்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 35 பேரை கைது செய்தனர்.
இப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ராஜப்பன் கோரிக்கையை விளக்கிப் பேசினார். பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற எஸ்.யு.சி.ஐ., விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சுருளியாண்டவர், ராஜேந்திரன் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பத்தில் ஆர்பாட்டம் நடந்தது. மொத்தம் 35 பேரை போலீசார் கைது செய்தனர்.