/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில் 3725 பேர் 'ஆப்சென்ட்' : தமிழ், கணிதம் எளிது

ADDED : செப் 15, 2024 12:31 AM
தேனி : மாவட்டத்தில் 52 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடந்தது. இதனை 11,279 பேர் எழுதினர். 3725 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., மூலம் குரூப் 2, 2ஏ நிலையிலான 2327 காலி பணியிடங்களுக்கு நேற்று தேர்வு நடந்தது. மாவட்டத்தில் 52 மையங்களில் 15,060 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
தேனி தாலுகாவில் 28 மையங்களில் 6264 பேர், பெரியகுளம் 9 மையங்களில் 1952 பேர், உத்தமபாளையம் 15 மையங்களில் 3063 பேர் என 11,279 பேர் தேர்வு எழுதினர்.தேனியில் 2037, பெரியகுளத்தில் 664, உத்தமபாளையத்தில் 1024 பேர் என மொத்தம் 3725 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர்.
தேர்வர்கள் கூறுகையில், தமிழ், கணிதம் பாடப்பிரிவுகளில் கேட்கப்பட்டிருந்த வினாக்கள் மிக எளிதாக இருந்தது. அறிவியல், சமூக அறிவியல், பொது அறிவு பகுதிகள் சற்று கடினமாக இருந்தது என்றனர்.