/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியில் 4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
/
இடுக்கியில் 4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
ADDED : ஏப் 06, 2024 04:26 AM
மூணாறு : இடுக்கி லோக்சபா தொகுதியில் நான்கு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, எட்டு வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இடுக்கி லோக்சபா தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 12 வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று தேர்தல் அதிகாரி ஷீபாஜார்ஜ் முன்னிலையில் நடந்தது. அதில் நான்கு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு எட்டு வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
அதன் விபரம்: டீன்குரியாகோஸ் (காங்.,), ஜாய்ஸ்ஜார்ஜ் (மா.கம்யூ.,), சங்கீதாவிஸ்வநாதன் (பா.ஜ.கூட்டணி), ரசல்ஜோய் (பி.எஸ்.பி.), சஜிஷாஜி (வி.சி.க.) மற்றும் சுயேச்சை மனுக்கள் ஏற்கப்பட்டன. ஏப்.8 வரை மனுக்கள் வாபஸ் பெறலாம். அன்று பகல் 3:00 மணிக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

