/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கள்ள துப்பாக்கி வைத்திருந்த 4 பேர் கைது
/
கள்ள துப்பாக்கி வைத்திருந்த 4 பேர் கைது
ADDED : ஆக 30, 2024 02:52 AM

பெரியகுளம்:தேனி மாவட்டம், பெரியகுளத்தில், தோப்புகளுக்குள் காட்டுமாடுகள், காட்டுப்பன்றிகள், மான், முயல்கள் கூட்டமாக வந்து விளை பொருட்களை சேதப்படுத்தின. இதனால் இரவில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக போலீசுக்கு தகவல் சென்றது.
போலீசார் தோப்பு காவலாளி முனியாண்டி என்பவரிடம் விசாரணை நடத்தினர். தோப்பில் பம்புசெட் அருகே அவர் வைத்திருந்த உரிமம் பெறாத கள்ளத்துப்பாக்கியை கைப்பற்றினர். பெரியகுளத்தைச் சேர்ந்த மின்வாரிய கணக்கீட்டு ஆய்வாளர் சரவணன், 51, கனகராஜ், 48, வினோத், 44, ஆகியோருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். சில தினங்களுக்கு முன் பெரியகுளத்தில் காட்டுப்பன்றிகளை வேட்டையாட, 29 நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்து கைதான சிவக்குமாருக்கும், இவர்களுக்கும் தொடர்புள்ளதா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

