/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தகுதி சான்றிதழ் இல்லாத 4 வாகனங்கள் பறிமுதல்
/
தகுதி சான்றிதழ் இல்லாத 4 வாகனங்கள் பறிமுதல்
ADDED : ஆக 09, 2024 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் மணிவண்ணன், அழகேசன் ஆகியோர் தலைமையிலான அலுவலர்கள் அன்னஞ்சி விலக்கில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது 3 டாடா மேஜிக் வாகனங்கள், ஒரு லாரி ஆகியவை தகுதி சான்றிதழை புதுப்பிக்காமலும், சாலை வரி செலுத்தாமல் இயக்கியது தெரியவந்தது. வாகனங்களை கைப்பற்றினர். மேலும் வாகன உரிமையாளர்கள் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியதால் அவர்களுக்கு ரூ.1.85 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, அபராதம் செலுத்தி வாகனங்களை மீட்க அறிவுறுத்தினர்.