/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு 40ஆயிரம் பேர் எழுதுகின்றனர்
/
மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு 40ஆயிரம் பேர் எழுதுகின்றனர்
மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு 40ஆயிரம் பேர் எழுதுகின்றனர்
மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு 40ஆயிரம் பேர் எழுதுகின்றனர்
ADDED : மே 30, 2024 03:54 AM
தேனி: மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு 154 மையங்களில் நடக்கிறது. இதில் 40,869 பேர் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர்.
மாநில அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் குரூப் 4 பணிகளுக்கு ஜன., ல் தேர்வு அறிவிக்கப்பட்டது. குரூப் 4 பிரிவில் உள்ள வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட 6244 பணியிடங்களுக்கான தேர்விற்கு ஜன.,30 முதல் பிப்., 28 வரை விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. தேர்வு ஜூன் 9ல் நடக்கிறது.
தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் தாலுகா வாரியாக தேனி 46, ஆண்டிப்பட்டி 21, போடி 18, பெரியகுளம் 24, உத்தமபாளையம் 45 என மொத்தம் 154 மையங்களில் தேர்வு நடக்கிறது.
இத்தேர்வில் தாலுகா வாரியாக தேனி 12,433, ஆண்டிப்பட்டி 5098, போடி 5190, பெரியகுளம் 6610, உத்தமபாளையத்தில் 11538 பேர் என 40,869 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள், பாதுகாப்பு பணிகள் பற்றி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.