/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் உழவர் சந்தையில் ஒரு மாதத்தில் ரூ.4.29 கோடிக்கு காய்கறி விற்பனை

ADDED : ஆக 07, 2024 05:40 AM
கம்பம் : கம்பம் உழவர் சந்தையில் ஒரு மாதத்தில் ரூ.4.29 கோடிக்கு காய்கறிகள் விற்பனையாகி உள்ளது.
தேனி மாவட்டத்தில் தேனி,கம்பம் உழவர் சந்தைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கம்பம் உழவர் சந்தையில் தினமும் 30 முதல் 40 டன் வரை காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கேரளாவைச்சேர்த்தவர்கள் அதிகமாக கொள்முதல் செய்கின்றனர்.
கடந்த ஜூலையில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 550 பேர்கள் காய்கறிகள் வாங்கி சென்றுள்ளனர். காய்கறிகளை 2418 விவசாயிகள் கொண்டு வந்து விற்றுள்ளனர். மொத்தம் 986 டன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.4.29 கோடியாகும். சராசரியாக நாள் ஒன்றுக்கு 32 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக பொதுமக்கள் 5300பேர் வந்து காய்கறி வாங்கி உள்ளனர்.
உழவர் சந்தை உதவி நிர்வாக அலுவலர் மாரிச்சாமி கூறுகையில், ' வெளி மார்க்கெட்டை விட உழவர் சந்தையில் விலை குறைவாக உள்ளது. சராசரியாக தினமும் 30 டன் விற்பனையாகிறது. இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகாலையில் வந்து வாங்கி செல்கின்றனர். இன்னமும் அதிகமாக பொதுமக்களை ஈர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.