/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி உழவர் சந்தையில் ஜூனில் ரூ.5.25 கோடிக்கு காய்கறி விற்பனை
/
தேனி உழவர் சந்தையில் ஜூனில் ரூ.5.25 கோடிக்கு காய்கறி விற்பனை
தேனி உழவர் சந்தையில் ஜூனில் ரூ.5.25 கோடிக்கு காய்கறி விற்பனை
தேனி உழவர் சந்தையில் ஜூனில் ரூ.5.25 கோடிக்கு காய்கறி விற்பனை
ADDED : ஜூலை 05, 2024 05:29 AM
தேனி: தேனி உழவர் சந்தையில் ஜூன் மாதத்தில் ரூ.5.25 கோடி மதிப்பிலான 1020 டன் காய்கறிகள் விற்பனை ஆனதாக நிர்வாக அலுவலர் வெங்கடேஷன் தெரிவித்தனர்.
தேனி உழவர் சந்தை நகரின் மையப்பகுதியில் அமைந்தள்ளதால் தினமும் அதிகளவில் பொதுமக்கள் காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை வந்து காய்கறிகள் வாங்கி செல்கின்றனர்.
இந்த உழவர் சந்தைக்கு சராசரியாக தினமும் தக்காளி 5 டன், கத்தரி 1.25 டன், வெண்டிக்காய் ஒரு டன், சின்னவெங்காயம், பல்லாரி தலா 1.50 டன் என தினமும் 35 டன் வரை காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்குள்ள கடைகளில் சுகாதார முறையில் விற்பனை செய்வதை உறுதி செய்து மத்திய உணவுப்பாதுகாப்புத்துறை சார்பில் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சான்றிதழும் பெறப்பட்டுள்ளது. இங்கு ஜூன் மாதத்தில் 1020 டன் காய்கறிகள் ரூ.5.25 கோடி மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக உழவர் சந்தை நிர்வாக அலுவலர் தெரிவித்தார்.