/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூ - வீலரில் வேகமாக சென்றவருக்கு 'அட்வைஸ்' செய்தவர் குத்திக்கொலை தாய், தந்தை உட்பட 6 பேர் கைது

ADDED : ஜூலை 31, 2024 10:50 PM

போடி:தேனி மாவட்டம், போடி ராசிங்காபுரத்தில் அதிவேகமாக டூ--வீலரில் சென்ற வாலிபரை பார்த்து போகுமாறு, 'அட்வைஸ்' கூறிய நபரை, ஸ்க்ரூ டிரைவரால் குத்தி கொலை செய்த வழக்கில் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
ராசிங்காபுரத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன், 45, விவசாயி. இவருக்கு மனைவி ஜெயா, 39. இரு குழந்தைகள் உள்ளனர். குபேந்திரன் நேற்று ராசிங்காபுரம் மெயின் ரோட்டில் நடந்து சென்ற போது, லட்சுமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சூர்யா, 22, என்ற வாலிபர், அதிவேகமாக டூ-வீலரை ஓட்டி மோதுவது போல சென்றார்.
குபேந்திரன், சூர்யாவை பார்த்து போகுமாறு கூறினார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. குபேந்திரனை கொலை செய்து விடுவதாக சூர்யா மிரட்டி உள்ளார்.
அதன் பின் சூர்யா, அண்ணன் முத்துக்குமார், 24, தந்தை கண்ணன், 50, தாய் பாக்கியலட்சுமி, 48, உறவினர்கள் மணிகண்டன், 25, அஜித்குமார், 25, ஆகியோரை அழைத்து வந்து குபேந்திரனை திட்டி தகராறு செய்தனர்.
கண்ணன், பாக்கியலட்சுமி, முத்து மணிகண்டன், அஜித்குமார் ஆகிய நால்வரும் குபேந்திரனை பிடித்து கொள்ள சூர்யா, முத்துக்குமார் இருவரும் சேர்ந்து அருகில் டூ-வீலர் பஞ்சர் கடையில் இருந்த ஸ்க்ரூ டிரைவரை எடுத்து குபேந்திரனை குத்தினர். பலத்த காயம் அடைந்த குபேந்திரனை போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இறந்தார்.
குபேந்திரனின் உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்ய கோரி, போடி அரசு மருத்துவமனை முன் அமர்ந்தனர். போடி டி.எஸ்.பி., பெரியசாமி, இன்ஸ்பெக்டர் உலகநாதன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன்படி, கலைந்து சென்றனர். போடி போலீசார் சூர்யா, முத்துக்குமார், கண்ணன் உட்பட ஆறு பேரை கைது செய்தனர்.