/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் காலாவாதியான நுாடுல்ஸ், சிப்ஸ் 60 கிலோ பறிமுதல்
/
தேனியில் காலாவாதியான நுாடுல்ஸ், சிப்ஸ் 60 கிலோ பறிமுதல்
தேனியில் காலாவாதியான நுாடுல்ஸ், சிப்ஸ் 60 கிலோ பறிமுதல்
தேனியில் காலாவாதியான நுாடுல்ஸ், சிப்ஸ் 60 கிலோ பறிமுதல்
ADDED : செப் 05, 2024 05:16 AM

தேனி: தேனியில் உணவுப்பாதுகாப்புத்துறையினர் மொத்த விற்பனை கடைகளில் செய்த ஆய்வில் காலாவதியான 25 கிலோ நுாடுல்ஸ், 35 கிலோ சிப்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஜாக்குலின், அமேசான் ஆன்லைனில் நுாடுல்ஸ் வாங்கி சாப்பிட்டு இறந்தார். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் நுாடுல்ஸ் தயாரிப்பு, விற்பனை, சேமிப்பு கிடங்குகளில் உணவுப்பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டது. தேனி நகர்பகுதியில் மதுரை ரோடு, பெரியகுளம் ரோடு, சேல்ஸ் சொசைட்டி தெரு, கொண்டுராஜா தெரு உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள நுாடுல்ஸ் மொத்த விற்பனை நிலையங்கள், ஆவின் பாலகம் உள்ளிட்டவற்றில் உணவுப்பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ராகவன் தலைமையில் அலுவலர்கள் பாண்டியராஜ், சக்திஸ்வரன், ஜனகர் ஜோதிநாதன் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் காலாவதியான ரூ.10ஆயிரம் மதிப்புள்ள 25 கிலோ நுாடுல்ஸ், ரூ.5ஆயிரம் மதிப்பிலான 35 கிலோ சிப்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவற்றை விற்பனை செய்த 5 கடைகளுக்கு தலா ரூ.2ஆயிரம் அபராதம் விதித்தனர். நான்கு கடைகளில் இருந்து நுாடுல்ஸ் மாதிரிகள் எடுத்து ஆய்விற்கு அனுப்பப்பட்டது. பொதுமக்கள் பொருட்கள் வாங்கும் போது, அதில் பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதியினை பார்த்து வாங்க வேண்டும்.
சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்றால், காலாவதி உணவுப்பொருட்கள் விற்றால்94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். என்றனர்.