sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு துவங்கியது 688 அதிநவீன கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது

/

ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு துவங்கியது 688 அதிநவீன கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது

ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு துவங்கியது 688 அதிநவீன கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது

ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு துவங்கியது 688 அதிநவீன கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது


ADDED : ஜூன் 11, 2024 08:40 PM

Google News

ADDED : ஜூன் 11, 2024 08:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்:தமிழகத்தின் 5வது புலிகள் காப்பகமாகவும், இந்தியாவின் 51வது புலிகள் காப்பகமாகவும் ஸ்ரீவி., மேகமலை அறிவிக்கப்பட்டது. 2021 ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட இந்த காப்பகத்தின் பரப்பளவு ஒரு லட்சத்து ஆயிரத்து 657 எக்டேர் ஆகும்.

புலிகள் கணக்கெடுப்பு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். டில்லியில் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு முகமை - என்.டி.சி.ஏ., இந்த பணிகளை ஒருங்கிணைக்கும். கடைசியாக, 2022ல் நடந்த கணக்கெடுப்பு விபரம் 2023 ஏப்ரலில் வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவில் 3,167 புலிகளும், தமிழகத்தில் 264 புலிகளும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக 526 புலிகள் உள்ளது. இந்த கணக்கெடுப்பு தவிர அனைத்து காப்பகங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை கணக்கெடுப்பு செய்து, அதன் விபரங்களை டில்லி என்.டி.சி.ஏ., வழங்க வேண்டும். அதன்படி, கடந்த ஜூன் 4ல் கணக்கெடுப்பு பணி துவங்கி உள்ளது.

இதுகுறித்து, மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் கூறுகையில், “ஜூன் 9 வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது, அதிநவீன வசதியுடன் வீடியோ, போட்டோவும் எடுக்க கூடிய 688 கேமராக்கள் வனப்பகுதிக்குள் பொருத்தும் பணி துவங்கி உள்ளது. 25 நாட்கள் கேமராவில் பதிவுகளை, அதாவது, ஜூலை 5ல் பதிவுகளை எடுத்து ஆய்வுக்குட்படுத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் துவங்குவதற்கு முன், மழை காலத்திற்கு பின் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும்,” என்றார். இந்தியாவில் உள்ள 54 காப்பகங்களிலும் தற்போது இந்த பணிகள் நடைபெறுகின்றன.






      Dinamalar
      Follow us