/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தல் விதிமீறலில் 81 வழக்குகள் பதிவு
/
தேர்தல் விதிமீறலில் 81 வழக்குகள் பதிவு
ADDED : ஏப் 19, 2024 05:44 AM
தேனி: தேனி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறி செயல்பட்டதாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பெரியகுளம் தொகுதியல் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேனி லோக்சபா தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களின் பிரசாரம் ஏப்.,17 மாலை நிறைவடைந்தது.
அரசியல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சித்தலைவர்கள், பிரபலங்கள், சினிமா நடிகர்கள் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
சில இடங்களில் வேட்பாளர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை கடந்து கொடிகள் நடுதல், பொதுமக்களை திரட்டுதல், பட்டாசு வெடித்தல், பணம் வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் விதிமீறியதாக பறக்கும் படையினர் வீடியோ குழு, பொதுமக்கள் வருவாய்த்துறையினர், போலீசார் ஆகியோரிடமிருந்து 84 புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டன.
இதில் அதிகபட்சமாக பெரியகுளம் தொகுதியில் 32 வழக்குகள் பதிவாகின.
தி.மு.க.,வினர் மீது 26, அ.ம.மு.க.,வினர் மீது 28, அ.தி.மு.க.,வின் மீது 15, பா.ஜ., மா.கம்யூ., தே.மு.தி.க., மீது தலா 2, நாம் தமிழர், வி.சி.க., மீது தலா ஒரு வழக்கு, சுயேசைகள் மீது 3 என மொத்தம் 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

