/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியில் 8 நாட்களில் 88 வழக்குகள் பதிவு; போதை பொருட்கள் தவிர்க்க விழிப்புணர்வு

ADDED : மார் 03, 2025 07:11 AM
மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை, பயன்பாடு தொடர்பாக போலீசார் எட்டு நாட்களில் 88 வழக்குகள் பதிவு செய்து, போதைப் பொருட்கள் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கேரளாவில் போதை பொருட்கள் விற்பனை, பயன்பாடு தொடர்பாக டி.ஜி.பி. ஷேக்தர்வேஷ்சாஹேப் உத்தரவுபடி ஆப்பரேஷன் 'டி ஹண்ட்' என்ற பெயரில் பிப்.22 முதல் மார்ச் 1 வரை போலீசார் தீவிர பரிசோதனை நடத்தினர்.
அதில் இடுக்கி மாவட்டத்தில் எட்டு நாட்களில் 88 வழக்குகள் பதிவு செய்து 93 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் மூன்று பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கஞ்சா 2.03 கிலோ, மெத்தபெட்டமைன் 0.97 கிராம் உள்பட பல்வேறு போதை பொருட்கள் சிக்கின.
'போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். சோதனைகள் விரிவுபடுத்தப்பட்டு போதை பொருள் விற்பனை செய்வோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, இடுக்கி எஸ்.பி. விஷ்ணுபிரதீப் கூறினார்.
பொது மக்கள் போதை பொருட்கள் விற்பனை, பயன்பாடு தொடர்பாக கேரள போலீசின் 99959 66666 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் அளிக்கலாம்.