/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாக்காளர்களை கவரும் வேட்பாளர்களின் பிரசார யுக்தி விமர்சனம் இன்றி சாதனையை கூறி ஓட்டு சேகரிப்பு
/
வாக்காளர்களை கவரும் வேட்பாளர்களின் பிரசார யுக்தி விமர்சனம் இன்றி சாதனையை கூறி ஓட்டு சேகரிப்பு
வாக்காளர்களை கவரும் வேட்பாளர்களின் பிரசார யுக்தி விமர்சனம் இன்றி சாதனையை கூறி ஓட்டு சேகரிப்பு
வாக்காளர்களை கவரும் வேட்பாளர்களின் பிரசார யுக்தி விமர்சனம் இன்றி சாதனையை கூறி ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 07, 2024 05:25 AM
கம்பம், : தேனி லோக்சபா தொகுதியில் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பிரசார ஸ்டைல் வரவேற்பை பெற்று வருகிறது.
தேனி தொகுதியில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் பிரசார யுக்தி வாக்காளர்களை கவர்கிறது.
பணபலம், படை பலம், தேர்தல் வியூகம், அனைத்தையும் மீறும் ஒன்றாக வேட்பாளர பிரசார யுக்தி முக்கிய இடம் பெறுகின்றன.
தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். போடி, பெரியகுளம் தொகுதி அத்துபடி. அங்குள்ள கட்சி நிர்வாகிகளும் முழு வீச்சில் களப்பணியில் உள்ளனர். இவர் பல தேர்தல்களில் களம் கண்டவர் என்பதால் ஊருக்கு ஏற்ப பேசுகிறார். கிராம பாணியில் பக்கத்து ஊர்க்காரன் நீங்கள் கூப்பிட்டால் ஓடோடி வருவேன். நான் ஜெயித்தால் உங்களுக்கு தான் லாபம். பலனை அனுபவிப்பீர்கள். ஏசி கார்ல வரல.. உங்கள் நிலை தெரிந்தவன் என்று கூறி அரசின் பல திட்டங்கள் பற்றி பேசுகிறார். பிரசாரத்தில் பெரும்பாலும் யாரையும் திட்டி பேசுவதில்லை. என்னாப்பா ... பொறுங்கப்பா ... பேசிக்கிட்டிருக்கேன்ல... என்பன போன்ற கிராமத்து பாணியில் பேசுவது பொதுமக்களை கவரும் வகையில் உள்ளது.
அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் தொகுதி மக்களுக்கு மிக பரிச்சயமானவர். நகரம் முதல் குக்கிராமம் வரை நல்ல அறிமுகம் உண்டு. இவர் பிரதமர் மோடியின் நல்லாட்சி என்பதையே மையப்படுத்தி பேசுகிறார். இவர் கடந்த காலங்களில் கோயில்களுக்கு நிதி வழங்கியது, மக்களுக்கு உதவி செய்தது, உள்ளூர் பிரமுகர்களை கவரும் வகையில் பெயர் கூறி பேசுவது வரவேற்பு பெறுகிறது. மேலும் இன்று ஜெயலலிதா இல்லை தற்போது பிரதமர் மோடி உள்ளார். அவரிடம் கூறி தொகுதி தேவையை நிறைவேற்றுவேன் என்கிறார்.
அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி ஏகப்பட்ட வாக்குறுதிகளை பிரிண்ட் செய்து துண்டு பிரசுரமாக கொடுத்துள்ளார்.
நன்றாகவும் பேசுகிறார். நா.த.க. வேட்பாளர் மதன் ஜெயபாலன் பேசுவதே இல்லை. கும்பிடுவதோடு சரி.

