/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மனைவியை மிரட்டிய கணவர் மீது வழக்கு
/
மனைவியை மிரட்டிய கணவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 01, 2024 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு: வருஷநாடு செட்டிவீரன் தெருவை சேர்ந்தவர் வெற்றிச்செல்வம் 44, இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நாகலட்சுமி 33, என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
வாலிப்பாறையில் கூட்டுக் குடும்பமாக இருந்த நிலையில் சமீபத்தில் 3 குழந்தைகளுடன் கணவன் மனைவி இருவரும் வருஷநாட்டில் தனிக்குடித்தனம் சென்றனர். குடிப்பழக்கம் உள்ள வெற்றிச்செல்வம் வீட்டுச்செலவுக்கு பணம் கேட்டால் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். தன்னைத் தவிர மற்ற யாருடனும் பேசக்கூடாது என்று நிபந்தனை விதித்து மிரட்டி வந்துள்ளார். நாகலட்சுமி புகாரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.