/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வேலை வாங்கித் தருவதாக ரூ.4.50 லட்சம் பெற்ற போலீஸ்காரர் மீது வழக்கு
/
வேலை வாங்கித் தருவதாக ரூ.4.50 லட்சம் பெற்ற போலீஸ்காரர் மீது வழக்கு
வேலை வாங்கித் தருவதாக ரூ.4.50 லட்சம் பெற்ற போலீஸ்காரர் மீது வழக்கு
வேலை வாங்கித் தருவதாக ரூ.4.50 லட்சம் பெற்ற போலீஸ்காரர் மீது வழக்கு
ADDED : ஜூன் 22, 2024 05:46 AM
ஆண்டிபட்டி: அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று, திருப்பி தரவில்லை என போலீஸ்காரர் மீது வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார்.
ஆண்டிப்பட்டி சீனிவாசா நகரை சேர்ந்தவர் ஜக்கையன் 40, வழக்கறிஞர். இவருக்கும் பட்டிவீரன்பட்டியில் போலீசாக பணிபுரியும் ஆண்டிபட்டி நாச்சியார்புரத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்கும் தொழில் முறை பழக்கம் இருந்துள்ளது.
இதை பயன்படுத்தி பாக்கியராஜ், ஜக்கையன் மனைவிக்கு பள்ளி கல்வித்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.4.50 லட்சம் பெற்றுள்ளார்.
9 மாதமாகியும் வேலை பெற்று தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது பாக்யராஜ் அவரது சகோதரர் சக்திகுமார் இருவரும் ஜக்கையனை அசிங்கமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஜக்கையன் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.