/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓய்வு பெற்ற கடற்படை வீரர் மனைவியிடம் ரூ.23.75 லட்சம் மோசடி முன்னாள் ராணுவ வீரர் உட்பட நால்வர் மீது வழக்கு

ADDED : மார் 22, 2024 01:47 AM
தேனி:தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓய்வு பெற்ற இந்திய கடற்படை வீரர் ராஜ்குமார் மனைவி ஷோபனாவிடம் ரூ.23.75 லட்சம் மோசடி செய்த லட்சுமிபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கோவிந்தராஜ், அவரது மனைவி கிருஷ்ணவேணி, மகன் ராஜ்குமார், மருமகள் சரண்யா மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி ேஷாபனா. லட்சுமிபுரம் கோவிந்தராஜன். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர்கள் லட்சுமிபுரம் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க உறுப்பினர்கள். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
கோவிந்தராஜ், அவரது குடும்பத்தினர் 2021 அக்., ேஷாபனா வீட்டிற்கு சென்று, நாங்கள் நடத்தும் சீட்டுத் திட்டத்தில் இணைந்தால் குடும்ப செலவிற்கு உதவிகரமாக இருக்கும்' என்றனர். அதை நம்பிய ராஜ்குமார், ேஷாபனா, ''ரூ.25 லட்சம் சீட்டுத் திட்டத்தில் இணைந்தனர். பின் மாதந்தோறும் பணம் செலுத்தினர்.
2023 ஜூனில் அனைத்து மாத தவணைகளையும் செலுத்தி முடித்தனர். பின் முதிர்வு தொகையை வாங்கிக் கொள்ள திட்டமிட்டனர். ேஷாபனா செலுத்திய ரூ.23.75 லட்சத்தை திருப்பி கேட்டார். அதற்கு கோவிந்தராஜ் பணம் தருகிறேன் எனக்கூறி சீட்டுத்திட்டத்தில் வரவு வைத்த அட்டையை பெற்று கொண்டு பணம் வழங்காமல் கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ஷோபனா மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்படி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயா ராஜலட்சுமி, எஸ்.ஐ., பாஸ்கரன் ஆகியோர் கோவிந்தராஜ், அவரது மனைவி, மகன், மருமகள் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.